Thursday, September 11, 2014
வெள்ளை பூசணிக்காய்
உடலை இளைக்கச் செய்வதிலிருந்து, சிறுநீரகக் கோளாறுகளை சரி செய்வது வரை வெள்ளை பூசணிக்குள் ஒளிந்திருப்பது அத்தனையும் அற்புதமான மருத்துவக் குணங்களே.
ஆங்கிலத்தில் பூசணிக்காய்க்கு ‘ஆஷ் கார்டு’ என்று பெயர். ஆயுர்வேதத்தில் வெண்பூசணிக்கு முக்கிய இடமுண்டு. அசிடிட்டி பிரச்சனைக்கு பூசணிக்காய் சாறு மாமருந்து.
‘கேஸ்ட்ரைடிஸ் ஈஈஸாஃபேகல் ரிஃப்ளெக்ஸ் டிசீஸ்’ என்பது ஒருவகை செரிமானக் கோளாறு (நெஞ்செரிச்சல்). வயிற்றிலிருந்து அமிலம் போல ஒரு திரவம் தொண்டைக்கு வருவதை உணர்வார்கள். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு பூசணிக்காய் சாறு தீர்வு தரும்.
பூசணிக்காயை தோலும் விதையும் நீக்கி, அப்படியே மிக்ஸியில் அடித்து, 2 நாட்களுக்கொரு முறை வீதம், 10 நாட்களுக்கு வெறும் வயிற்றில் குடித்தால் நிவாரணம் தெரியும்.
பூசணிக்காயில் கலோரி குறைவு என்பதால் எடை குறைக்க நினைப்போருக்கு மிகவும் சிறந்தது.
கொழுப்பில்லாத காரணத்தினால் நீரிழிவு பாதித்தவர்கள், இதய நோயாளிகளுக்குக் கூட இது சிறந்தது.
100 கிராம் பூசணிக்காயில் இருப்பது வெறும் 10 கலோரிகள் மட்டுமே. புரதச் சத்து 0.48 கிராமும், கார்போஹைட்ரேட் 1.9 கிராமும், இரும்புச்சத்து 0.8 மி.கிராமும், கொழுப்புச்சத்து 0.1 கிராமும் மட்டுமே இருப்பதால், யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
96 சதவிகிதம் தண்ணீர் சத்து கொண்டது என்பது ஹைலைட். சிறுநீரகக் கோளாறுகளை விரட்டும் குணமும் கொண்டது.
0 comments:
Post a Comment