Monday, September 8, 2014

// // Leave a Comment

மாதுளம் பழம்



நோய் எதிப்பு சக்திக்கு மாதுளம்

மாதுளம் பழத்தில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளன. மதுளையில் சுண்ணாம்பு சத்து, தாது உப்புக்கள், இருப்பு சத்து என நோயை எதிர்க்கும் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.

இப்பழம் நோய் கிருமிகளை அறவே அழிக்கவும், இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்ச்சி அளிக்கவும் பயன்படுகிறது. உடலை பித்தத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மாதுளை பெரும் பங்கு வகிக்கின்றது. வயிற்று வலிக்கு சிறந்த நீவாரணியாகவும், உடலில் உள்ள நீர்ச் சத்துக்களை அதிகரிக்கும் தன்மையும் மதுளம் பழத்திற்கு உண்டு.

மாதுளம் பழத்தின் பூ, பழம், அதன் பட்டை என அனைத்திலுமே மருத்துவ குணம் அடங்கியுள்ளது. இது உடல் கடுப்பு மற்றும் சூட்டை தணிக்கும். மூல நோய் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து எனலாம். இந்த பழத்தை சாறாக எடுத்து சாப்பிடுவதோடு பழமாகவே சாப்பிடுவதால் அனைத்துவிதமான நார் சத்துக்களும் நேரடியாக உடலுக்குக் கிடைக்கும்.

குழந்தைகளின் உடலுக்கு நீர்ச்சத்துக்களை அளிப்பதோடு ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது. மாதுளம் பூக்களை உலர்த்தி காய வைத்து பொடி செய்து வைத்து வேளைக்கு ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இருமல் நிற்கும் இவ்வாறு அநேக சத்துக்களை கொண்டதாக மாதுளை விளங்குகிறது.

0 comments:

Post a Comment