Monday, September 1, 2014

// // Leave a Comment

வெள்ளரிக் காய்



வெள்ளரி காயின் நன்மைகள்

வெள்ளரிக் காயில் ஒரு நாளைக்கு நமக்குத் தேவையான வைட்டமின் B1, B2, B3, B5, B6, போலிக் ஆசிட், வைட்டமின் C, கால்சியம், மக்னேசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் ஆகிய அத்தனை சத்துப் பொருட்களும்  இருக்கின்றன.

மதிய நேரத்தில் உண்டாகும் சோம்பலைப் போக்க காப்பி குடிப்பவரா நீங்கள்? காப்பிக்கு பதில் ஓர் வெள்ளரிக் காயை  சாப்பிடுங்கள்.  இதில் இருக்கும் வைட்டமின் B யும், கார்போஹைடிரெட்டும்  சட்டென்று ஒரு  புத்துணர்ச்சியைக் கொடுக்கும். இப் புத்துணர்ச்சி  நீண்ட நேரம் நிலைத்தும் இருக்கும்.

குளித்து முடித்தவுடன் குளியலறைக் கண்ணாடியில் நீர்படலம் படிந்துள்ளதா? ஒரு வெள்ளரித் துண்டத்தை எடுத்து கண்ணாடியில் தேய்க்கவும். நீர்படலம் மறைவதுடன், வெள்ளரியின் மணமும் குளியலறையில் வீசும்.

உங்களது அருமையான தோட்டத்தில் செடிகள் பயிரிட என்று தயார் செய்து வைத்திருக்கும் இடங்களில் பூச்சிகள் தொல்லையா? சிறு சிறு அலுமினியக் கிண்ணங்களில் வெள்ளரித் துண்டங்களை போட்டு  ஆங்காங்கே வைத்துவிடுங்கள். வெள்ளரியிலிருந்து வெளி வரும் நீர் அலுமினியத்துடன் கலந்து ஒரு வாசனையைப் பரப்பும். மனிதர்களால்  நுகர  முடியாத இந்த வாசனைக்கு பூச்சிகள் ஓடிவிடும்.

முதல் நாள் இரவுப் பார்ட்டி முடிந்து வரும் ‘hangover’ அல்லது தலையைப் பிளக்கும் தலைவலி இவற்றைப் போக்க  படுக்கப் போகுமுன் சில வெள்ளரித் துண்டங்களை சாப்பிடுங்கள். வெள்ளரியில் இருக்கும் வைட்டமின் B,  சர்க்கரைச் சத்து மற்றும் மின் அயனிகள் (electrolytes) உடலுக்குத்  தேவையான சத்தை கொடுப்பதுடன் உடலை சம நிலையில் வைக்கவும், ‘hangover’, மற்றும் தலை வலியைப்  போக்கவும் உதவும்.

களைப்புற்ற கண்களுக்கு புத்துணர்வு கொடுக்கவும், கண்ணின் கீழ் காணும் கருவளையங்களை போக்கவும் வெள்ளரி உதவுகிறது.

நம் உடலில் ஆங்காங்கே தெரியும் வேண்டாத மடிப்புகளையும் ‘டயர்’ களையும் குறைக்க வெள்ளரி உதவுகிறது. வெள்ளரித் துண்டங்களை இந்த இடங்களில தேய்க்க வெள்ளரியில் உள்ள பைடோ கெமிக்கல்ஸ் சருமத்தில் உள்ள கொலோஜென்னை   இறுக்குவதுடன், மடிப்புகளை குறைத்துத் தோற்றமளிக்க செய்கிறது.

சாயங்காலத்தில் ஏதாவது சாப்பிட வேண்டும் போல்  இருந்தால் வெள்ளரிக் காயை நறுக்கி சிறிது உப்பு, காரப் போடி போட்டு சாப்பிடலாம். மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் அருமையான ஸ்நாக் இது.

அவசரமாக ஒரு மீடிங்க்குக்குப் போக வேண்டும்; ஷூ பாலீஷ் போட நேரம் இல்லையா? வெள்ளரித் துண்டத்தை ஷூக்களின் மீது தேய்க்க, ஷூக்கள் பள பள!

கதவுகளின் கீல்கள் க்றீச் க்றீச்? வெள்ளரித் துண்டத்தை எடுத்து கீல்களின் மேல் தேய்க்க,  க்றீச் க்றீச் மாயம்!

அலுவலகத்திலும், வீட்டிலும் வேலை செய்து செய்து அலுத்து விட்டதா? அழகு நிலையம் போக முடியவில்லையா? கவலை வேண்டாம்: இருக்கவே இருக்கிறது வெள்ளரி மசாஜ்: ஒரு முழு வெள்ளரியை வளையம் வளையமாக நறுக்கி கொதிக்கும் நீரில் போடவும். அதிலிருந்து வரும் ஆவியைப் முகத்தில் பிடிக்க அலுப்பு போயே போச்! இது குழந்தை பெற்ற புது தாய்மார்களுக்கும், காலேஜ் மாணவிகளுக்கு பரீட்சை சமயத்திலும் மிகவும் உதவியாக இருக்கும்.

அலுவலக பார்ட்டியா? மேலதிகாரியுடன் பேசிக் கொண்டே சாப்பிட்டதில் கடைசியாக பான் போட மறந்து விட்டீர்களா? ஒரு வெள்ளரித் துண்டத்தை எடுத்து நாக்கின் மேல் 30 நொடிகள் வைத்திருங்கள். வெள்ளரியில் இருக்கும்  பைடோ கெமிக்கல்ஸ் வாய் துர்நாற்றத்தைப் போக்கும் வல்லமை வாய்ந்தது.

குழாய்கள், ஸ்டெயின்லஸ் ஸ்டீல் சிங்க் முதலியவற்றை கழுவ ‘சுற்றுச் சூழல்’ நண்பனான ஒரு கிருமி நாசினி வெள்ளரிக்காய் தான். வெள்ளரித் துண்டங்கள் விடாப் பிடி கரையைப் போக்குவதுடன், கைகளுக்கும் நல்லது.

பேனாவினால் எழுதியதை அழிக்கவும், உங்கள் சுட்டிப் பெண்ணின் சுவர் சித்திரங்களை அழிக்கவும் வெள்ளரி ஒரு அருமையான அழிப்பான்.

0 comments:

Post a Comment