Thursday, September 18, 2014
ஓட்ஸ் ஃபேஸ் ஸ்கரப்
சருமம் பட்டுப் போன்று இருப்பதற்கு சருமத்திற்கு கிளின்சிங் மற்றும் மாஸ்சுரைசிங் போன்றவற்றை மட்டும் செய்தால் போதாது. இவற்றால் மட்டும் சருமம் நன்கு அழகோடு, பட்டுப் போட்டு இருக்கும் என்று நினைப்பது தவறு. ஏனெனில் இதனால் மட்டும் முகத்தில் இருக்கும் அழுக்குகள் முழுவதும் நீங்கிவிடாது.
அவ்வப்போது சருமத்திற்கு ஸ்கரப் செய்ய வேண்டும். அதிலும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரத்திற்கு ஒரு முறையாவது ஸ்கரப் செய்ய வேண்டும். ஓட்ஸ் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பொருட்களில் ஒன்றாக இருப்பதோடு, சருமத்திற்கு அழகூட்டும் பொருளாகவும் பயன்படுகிறது. அந்த ஓட்ஸை வைத்து எவ்வாறு சருமத்திற்கு ஸ்கரப் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
ஸ்பூன் ஓட்ஸை பொடி செய்து, ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி 5 முதல் 10 நிமிடம் மென்மையாக மசாஜ் போல் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.
ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்திற்கு தடவி, ஸ்கரப் செய்து கழுவிட வேண்டும். எலுமிச்சை சாற்றை ஓட்ஸ் உடன் சேர்த்து ஸ்கரப் செய்தால், முகம் நன்கு பளிச்சென்று காணப்படும்.
ஓட்ஸ் உடன் தக்காளி சாற்றை விட்டு ஸ்கரப் செய்தால், தக்காளியில் உள்ள அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கிவிடும். இந்த ஸ்கரைப்பை வாரத்திற்கு 2-3 முறை செய்தால், நல்ல பலனை விரைவில் பெற முடியும். மேலும் ஓட்ஸை வைத்து ஸ்கரப் செய்வதால், சருமத்துளைகள் ஆரோக்கியம் அடைவது மட்டுமல்லாமல், சருமத்தின் நிறமும் கூடும்.
வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து, அதனுடம் ஓட்ஸ் பொடியை கலந்து வாரத்திற்கு ஒரு முறை ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்
0 comments:
Post a Comment