தேவையான பொருட்கள் :
பூண்டு - அரை கப்
காய்ந்த மிளகாய் - 5
புளி - எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
தாளிக்க - நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு
செய்முறை :
* கடாயில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
* வதக்கியதை ஆற வைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து அரைத்த துவையலில் கொட்டி கிளறவும்.
* பொதுவாக நமது உணவில் பூண்டை அதிகம் சேர்த்து வருவது உடலில் கொழுப்பு சேராமல், ஆரோக்கியம் காக்கும். மேலும் அஜீரண கோளாறை சரிசெய்யும்.
0 comments:
Post a Comment