Wednesday, September 10, 2014

// // Leave a Comment

திராட்சை



பழங்களின் ராணி என்றழைக்கப்படும் திராட்சையில் எண்ணற்ற மருத்துவ பலன்கள்நிறைந்துள்ளன.

இப்பழத்தில் வைட்டமீன் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளன.

மேலும் உடலுக்கு தேவையான தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்களை உடலுக்கு வழங்கி ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது.

திராட்சையை உண்பதால் உடல் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், முளை, நரம்புகள் வலுப்பெறும்.

பித்தத்தால் ஏற்படும் வாந்தி, தலைச்சுற்றல், ஒற்றை தலைவலி ஆகிய பிரச்னைகளுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும்.

ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும்.

பசி இல்லாதவர்கள் அடிக்கடி திராட்சையை சாப்பிட வேண்டும். அது பசியைத் தூண்டி விடும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.

கண்பார்வையை அதிகரிக்கிறது. உடலில் தேவையில்லாத கொழுப்புகளை நீக்கவும், சிறுநீரக பிரச்னையை அகற்றவும் இது பயன்படுகிறது.

திராட்சைப் பழத்துடன் மிளகை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர, நாக்கு வறட்டுதல் நீங்கும்.

திராட்சை சாறுடன் சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர மாதவிடை கோளாறுகள் சரியாகும். வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறுவதற்கு சிறந்த மருந்தாகும்

உடல் அசதிக்கும், பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்திற்கும் திராட்சைப் பழம் ஏற்றது.

0 comments:

Post a Comment