Thursday, September 18, 2014

// // Leave a Comment

சரும அழகிற்கு உதவும் வினிகர்


சருமத்தின் அழகை பராமரிக்க உதவும் பொருட்களில் வினிகரும் ஒன்றாக உள்ளது. வினிரை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகம் பொலிவாததோடு, பருக்கள், வறட்சி, கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்கிவிடும். எனவே சருமத்தை அழகாக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்கள், வினிகரைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.

உடல் நாற்றம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. உடல் நாற்றம் மறைய ஒரு சிறிய கப் வினிகரை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்றமானது நீங்கும்.

ஒரு சிறிய டேபிள் ஸ்பூன் வினிகரை, முகம் கழுவும் போதோ அல்லது குளிக்கும் போதோ நீரில் கலந்து செய்தால், சருமம் நன்கு மென்மையாவதோடு, பொலிவோடும் இருக்கும். இதை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எண்ணெய் பசை சருமத்தினருக்கு, சருமத்தில் அதிகப்படியான எண்ணெயானது இருக்கும். எனவே ஒரு கப் நீரில் பாதிக்கு பாதி வினிகர் மற்றும் தண்ணீரை கலந்து கழுவி வந்தால், சருமத்திலிருந்து வெளிவரும் அதிகப்படியான எண்ணெய் பசையானது நீங்கி, முகம் அழகாக அளவான எண்ணெயோடு வறட்சியின்றி காணப்படும்.

கோடைக்காலத்தில் சருமத்தில் ஏற்படும் வேனிற்கட்டியை போக்குவதில் வினிகர் உதவியாக உள்ளது. மேலும் வினிகர் சருமத்தில் பிஎச் தன்மையை சீராக தக்க வைத்து, சருமத்தை குளிர்ச்சியுடன் வைக்க உதவுகிறது. 

குதிகால் வெடிப்பால் அவஸ்தைப்படுபவர்கள், பாதங்களை வினிகர் நீரில் பாதங்களை ஊற வைக்க வேண்டும். பின்னர் மெருகேற்ற உதவும் கல் கொண்டு, பாதங்களை தேய்க்க வேண்டும். இதனால் பாத வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் போய்விடும்.

0 comments:

Post a Comment