Friday, September 19, 2014
கம்பு ராகி ‘மேதி’ சப்பாத்தி
தேவையான பொருட்கள்
கம்பு மாவு - அரை கப்
ராகி மாவு - கால் கப்
கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கியது) - 2
மஞ்சள்தூள் - சிறிது
உப்பு - ருசிக்கேற்ப
வெந்தயக் கீரை - 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை
அனைத்து மாவுடன் உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி- பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து, அரை மணி நேரம் ஊற வைத்து, சப்பாத்தியாக இடவும். தோசைக் கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி, சப்பாத்தியைப் போட்டு, இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
0 comments:
Post a Comment