Friday, September 5, 2014

// // Leave a Comment

கழுத்து வலி தீர பாட்டி வைத்தியம்


மனிதனை அவதிப்படுத்தும் வலிகள் அனேகம். அதிலும் கழுத்து வலி ஏற்படுத்தும் வேதனை அதை அனுபவிப்பவர்களுக்கே தெரியும். இன்று இளைஞர்களும் கூட கழுத்து வலியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கழுத்து வலி தீர பாரம்பரிய மருத்துவத்தில் சில வழிகள் உள்ளன.

அதில் ஒன்று தலையாணை வைத்து தூங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் இந்த கழுத்து வருவதாக கூறப்படுகிறது. எனவே கழுத்து வலி வந்தால் முதலில் தலையணை வைத்து தூங்குவதை நிறுத்துங்கள் சமதளமான தரையில் பாய் விரித்து தூங்குங்கள் என்கிறார்கள்.

அடுத்து நொச்சி இலையை நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி அதை தலைக்கு தேய்த்து அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் குளியுங்கள். ஒருநாள் நொச்சி இலை குளியல் என்றால், மறுநாள் யூகலிப்டஸ் இலையை கொதிக்க வைத்து குளியுங்கள்.

அடுத்தநாள் வாதமடக்கி(வாத நாராயணன்) இலையை கொதிக்க வைத்து உடம்புக்கு ஊற்றுங்கள் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றார்கள். காலை சிற்றுண்டிக்கு முடக்கத்தான் இலையை இட்லி, தோசை மாவில் கலந்து சாப்பிடலாம்.

மதிய உணவுக்கு மிளகு ரசம் அல்லது கண்டதிப்பிலி ரசம் வைத்து சாப்பிடலாம். முடக்கத்தான் ரசமும் சாப்பிடலாம். பூண்டு, மிளகு குழம்பு சாப்பிடலாம். கடல் நண்டு கிடைத்தால் இஞ்சி பூண்டு காராமாக சேர்த்து சாப்பிடலாம்.

இரவு வேளையில் கண்டதிப்பிலியை இடித்து பால், நீர் சேர்த்து வேக வைத்து பனங்கற்பண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் கழுத்துவலி காணாமல் ஓடிவிடும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். கழுத்து வலியால் அவதிப்படுபவர்கள் இந்த குறிப்புகளை பின்பற்றி பாருங்கள்..  

0 comments:

Post a Comment