Thursday, September 11, 2014

// // Leave a Comment

பச்சை பட்டாணி






ஊட்டச்சத்து நிறைந்த பச்சை ஓடுகளில் விளையும் பச்சை பட்டாணி, மிகச்சத்தான காய்கறிவகையாகும்.

பெரும்பாலானோர் பச்சை பட்டாணியை ஊட்டச்சத்து நிறைந்த காயாக கருதமாட்டார்கள். எனினும்,பச்சை பட்டாணியில் ப்ஹைடொநியூடிரிஷியன்ஸ் அதிகம் நிறைந்துள்ளதால் அதன் பலன்கள் ஏராளம்.
பச்சை பட்டணியில் உள்ள கௌமெஸ்டிரால் எனப்படும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் ஒன்றாகும்.

இந்த காய்கறியை தினமும் சாப்பிட்டு வந்தால், வயிற்று புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாக அமையும். பச்சை பட்டாணியின் மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம். இதய நோய்களை தடுப்பதே இந்த பச்சை பட்டாணியின் மிக முக்கிய பலனாகும். இதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருட்களும் சிறிதளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

இதில் நோய் எதிர்ப்பு அழற்சி தன்மை நிறைந்துள்ளதால் அல்சைமர் நோயை தடுக்க உதவும். மேலும் இதனை உட்கொண்டால், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ப்ரோஞ்சிடிஸ் நோய்களையும் எதிர்க்கலாம். அதிக நார்ச்சத்தும் புரோட்டீன் சத்தும் நிறைந்துள்ள பச்சை பட்டாணிகள், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

0 comments:

Post a Comment