Tuesday, September 23, 2014

// // Leave a Comment

எலுமிச்சை டயட்


உடல் எடையை குறைக்க வேண்டுமா?

 அனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய உடல் மற்றும் அழகு நன்மைகள் நிறைந்துள்ளன என்பது தெரியும்.

அதிலும் இந்த புளிப்புச் சுவையுடைய பழம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைத்து, உடலை ஸ்லிம்மாகவும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ள உதவும் என்பதும் தெரிந்த விஷயமே.

எனவே உடல் எடை மற்றும் அழகைப் பராமரிப்பதற்கு எலுமிச்சை ஜூஸை மட்டும் குடிக்காமல், உண்ணும் உணவிலும் எலுமிச்சையைப் பயன்படுத்து நல்ல பலனைத் தரும்.

எலுமிச்சை டயட் மேற்கொள்ளும் போது திட உணவுகளான அரிசி அல்லது கோதுமையால் செய்யப்படும் உணவுகளை சிறிது நாட்கள் அதிகம் சாப்பிடக் கூடாது.

இதே போன்று கார உணவுகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கார உணவுகள் உடலில் டாக்ஸின்களின் அளவை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தையும் பாதிக்கும்.


காலை உணவு

எலுமிச்சை டயட்டை மேற்கொள்பவர்களுக்கு லெமன் பேன்கேக் ஒரு சிறந்த காலை உணவு. இதனால் வயிறு நிறைந்திருப்பதோடு நல்ல சுவையாகவும், உடல் எடையைக் குறைக்கக்கூடிய உணவாகவும் இருக்கும்.


எலுமிச்சை - தேன்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸில், தேன் சேர்த்து குடித்து வந்தால் உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேறி, உடல் எடை விரைவில் குறையும்.


எலுமிச்சை ஜூஸ்

ஒரு நாளைக்கு அவ்வப்போது எலுமிச்சை ஜூஸை குடித்தால் உடல் வறட்சி நீங்கி, நச்சுக்கள் வெளியேறி, அடிக்கடி பசி ஏற்படுவதும் தடைப்படும். குறிப்பாக எடை குறைக்க நினைப்போர், ஜூஸில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.


லெமன் பை [Lemon Pie]

டயட்டில் இருப்பவர்கள், நிச்சயம் க்ரீம் உள்ள உணவுப் பொருட்களை அறவே தொடக்கூடாது. குறிப்பாக செயற்கை இனிப்புக்களைப் பயன்படுத்தி செய்தவற்றை சாப்பிட்டால், இரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து, உடலில் கொழுப்புக்களும் அதிகரிக்கும். எனவே இத்தகைய க்ரீம்களை சாப்பிடுவதற்கு பதிலாக லெமன் பை சாப்பிடுவது சிறந்தது.


எலுமிச்சை சூப்

எடையை குறைக்க நினைக்கும் போது அதிகப்படியான நீர்பானங்களை குடிக்க வேண்டியிருக்கும், அதற்காக எப்போதுமே ஜூஸ் குடிக்க முடியாது. ஆகவே அப்போது அதற்கு பதிலாக சூடான எலுமிச்சை சூப் சாப்பிட்டால், புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, உடல் எடையும் குறையும்.

0 comments:

Post a Comment