தேவையான பொருட்கள்
வரகரிசி-ஒரு கப்,
கேரட் - 1
பீன்ஸ் - 4
உருளைக்கிழங்கு - 1
பச்சைப் பட்டாணி - கால் கப்
வெங்காயம் - 1
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
சோம்பு - கால் டீஸ்பூன்
முந்திரி - சிறிதளவு,
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
புதினா, கொத்தமல்லி - தேவைக்கேற்ப
செய்முறை
வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை சூடாக்கி, முந்திரியை வறுத்துக் கொள்ளவும். பிறகு, அதனுடன் 2-3 டீஸ்பூன் எண்ணெயை சேர்த்து சூடாக்கி, சோம்பு தாளித்து, நீளமாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு சேர்க்கவும். இஞ்சி - பூண்டு விழுது, பச்சைப் பட்டாணி, கீறிய பச்சைமிளகாய், சிறிதளவு புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். 3 கப் நீர் ஊற்றி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இப்போது வரகரிசி சேர்த்துக் கிளறி, குறைந்த தீயில் மூடிவைத்து சமைக்கவும். வெந்ததும், மீதமுள்ள 1 டீஸ்பூன் நெய் சேர்த்து, சிறிதளவு புதினா, கொத்தமல்லி தூவி, அலங்கரிக்கவும். சூடான, சுவையான, சத்தான, வரகு வெஜ் கிச்சடி ரெடி!
0 comments:
Post a Comment