Wednesday, September 10, 2014

// // Leave a Comment

குதிரை வாலி பொங்கல்

தானிய வகைகளில் குதிரைவாலி என்பது ஒன்றாகும். புரதசத்து நிறைந்தது இந்த குதிரைவாலி தானியம்.

தேவையான பொருள்கள் :


குதிரைவாலி - 100 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்
நெய் - தேவையான அளவு
மிளகு,சீரகம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
ப.மிளகாய் - 1


செய்முறை :

  • பாசிப்பருப்பை பொன் நிறமாக வறுத்து கொள்ளவும்.
  • ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • குதிரைவாலி தானியத்துடன், வறுத்த பாசிப்பருப்பை சேர்த்து நன்கு குழையும் வரை வேக வைக்கவும்.
  • மிளகை ஒன்றும் பாதியாக பொடித்து கொள்ளவும்.
  • கடாயில் நெய் ஊற்றி அதில் ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மிளகு, சீரகத்தை போட்டு தாளித்து அதை வெந்து கொண்டிருக்கும் பொங்கலில் கொட்டவும்.
  • பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும்.
  • இந்த குதிரை வாலி பொங்கலில் புரத சத்து அதிக அளவில் உள்ளது.


0 comments:

Post a Comment