Friday, October 3, 2014

// // Leave a Comment

வாழைப் பூ வடை


வாழைப் பூ வடை தேவையான பொருட்கள்

வாழைப் பூ                   - 1
துவரம் பருப்பு            - 2 கப்
பெரிய வெங்காயம் - 1
மிளகாய் வற்றல்     - 4
சோம்பு                         - 1 டீஸ்பூன்
பூண்டு                          - 2 பல்
உப்பு                              - தேவையான அளவு
எண்ணெய்                 - பொரிக்க


வாழைப் பூ வடை செய்முறை

வாழைப் பூவை உரித்து நடுவில், உள்ள நரம்பை நீக்கவும். துவரம் பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸியில் மிளகாய், சோம்பு, பூண்டு, உப்பு, துவரம் பருப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடைசியாக வாழைப் பூவையும் சேர்த்து ஒரு அடி அடிக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி இந்த மாவுடன் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பின்னர் இதனை வடைகளாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும். (வாழைப்பூவை பொடிப் பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம்). சாதத்துடன் சேர்த்து பரிமாறவும்.

0 comments:

Post a Comment