Monday, October 6, 2014

// // Leave a Comment

பொட்டுக் கடலை சாலட்


தேவையான பொருட்கள்

பொட்டுக் கடலை                     - 1 கப்
சின்ன வெங்காயம்                  - 2
காய்ந்த மிளகாய்                      - 1
சீரகம்                                             - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய்                      - 1/2 டீஸ்பூன்
உப்பு                                               - தேவையான அளவு


செய்முறை

சின்ன வெங்காயத்தை தோலுரித்து எவ்வளவு நைசாக நறுக்க முடியுமோ அவ்வளவு நைசாக நறுக்க வேண்டும். மிளகாயை சிறு சிறு துண்டுகளாக ஒடித்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸிங் பவுலில் பொட்டுக்கடலை, வெங்காயம், மிளகாய், சீரகம், நல்லெண்ணெய், உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

0 comments:

Post a Comment