Tuesday, October 7, 2014

// // Leave a Comment

கொள்ளு சூப்


தேவையான பொருட்கள்

கொள்ளு  -  1 கப்
தக்காளி  -  1 / 2
சின்ன கத்தரிக்காய்  -  1
பச்சை மிளகாய்  -  4
தனியா  -  1 டீஸ்பூன்
சீரகம்  -  1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை  -  சிறிது
புளி  -  சிறிது
மஞ்சள் தூள்  -  1 டீஸ்பூன்
எண்ணெய்  -  1 ஸ்பூன்
உப்பு  -  தேவையான அளவு


செய்முறை

முதலில் குக்கரை எடுத்து அதில் கொள்ளு, கத்தரிக்காய், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக விடவும். பிறகு ஒரு பாத்திரத்தில் வெங்காயம் (சிறிதாக வெட்டியது), பச்சைமிளகாய், மல்லி, சீரகம், கறிவேப்பில்லை போட்டு எண்ணெய் விட்டு நன்கு வதக்கி வேக வைத்த கொள்ளை சேர்த்து ஒரு கொதி விடவும்.பின்னர் அத்துடன் புளி சேர்த்து அரைக்கவும்.சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிடவும்.

0 comments:

Post a Comment