Monday, October 6, 2014
பட்டாணி சுண்டல்
தேவையான பொருட்கள்
பட்டாணி - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
பச்சைமிளகாய் - 2
தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
மாங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
பட்டாணியை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் பட்டாணியை அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு குக்கரில் 1 விசில் வேக வைக்கவும்.
2 விசில் விட்டால் பட்டாணி குழைந்து தோல் தனியாக வந்து விடும்.
வெந்தவுடன் தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பின் வட்ட வட்டமாக நறுக்கிய பச்சைமிளகாய் போட்டு, பின் மாங்காய்த்துருவல், வேக வைத்த பட்டாணி, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாகக் கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.
0 comments:
Post a Comment