Monday, October 6, 2014

// // Leave a Comment

நவ தானிய அடை


தேவையான பொருட்கள்

இட்லி புழுங்கலரிசி      - 1 கப்
பச்சரிசி                               - 1 கப்
துவரம் பருப்பு                  - 1 கப்
கடலைப் பருப்பு              - 1/4 கப்
உளுத்தம் பருப்பு             - 1/4 கப்
கொண்டைக் கடலை    - 1/4 கப்
பட்டாணி                            - 1/4 கப்
பச்சைப்பயறு                    - 1/4 கப்
கொள்ளு                             - 1/4 கப்
தனியா                                - 2 டீஸ்பூன்
மிளகாய்                             - 6
கறிவேப்பிலை                - சிறிது
எண்ணெய், உப்பு            - தேவையான அளவு
பெருங்காயம்                  - 1/2 டீஸ்பூன்
இஞ்சி                                  - 2 இன்ச்



செய்முறை

இட்லி புழுங்கலரிசி, பச்சரிசி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு முதலியவற்றை கழுவி ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

கொண்டைக் கடலை, பட்டாணி, பச்சைப் பயறு, கொள்ளு முதலியவற்றை 6 மணி நேரம் ஊற வைக்கவும். இஞ்சியை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும்.

நன்கு ஊறிய பின் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியிலோ அல்லது கிரைண்டரிலோ கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவை தோசைக்கல்லில் அடைகளாக ஊற்றி இரு பக்கமும் நன்கு வேக வைத்து எடுக்கவும்.

0 comments:

Post a Comment