Monday, October 6, 2014
பாசிப்பருப்பு துவையல்
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - கால் கப்
பச்சை மிளகாய் - 3
புளி - கொட்டைப்பாக்கு அளவு
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
பாசிப்பருப்பு ஒரு மணி நேரம் ஊற வைத்து வடிக்கவும். அதனுடன் பச்சை மிளகாய், புளி, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பருப்புத் துவையலில் சேர்த்துப் பரிமாறவும்.
0 comments:
Post a Comment