Wednesday, August 20, 2014

// // Leave a Comment

சித்த மருத்துவ குறிப்புகள்-1


அஜீரணம் அகல:

1. ஓம வாட்டரும், தேனும் கலந்து குடிக்கலாம்.
2. ஓமத்தை வாணலியில் பொரித்து, தண்ணீரில் வேகவிட்டு அந்த தண்ணீரையும் வடிகட்டிக் குடிக்கலாம்.
3. சோடா, எலுமிச்சம்பழம் உப்பு போட்டு அருந்தினாலும் வயிற்றுவலி குறைந்து ஜீரணம் ஏற்படும்


உடல் வலி தீர:
துளசியிலை, மிளகுப்பொடி, சுக்குப்பொடி இவைகளை தண்ணீரில் போட்டு கஷாயமாக்கி பாலும், சர்க்கரையும் சேர்த்துப் பருகவும்.


சளியை விரட்ட:

சாம்பிராணி, மஞ்சள், சீனி கொண்டு புகைப்பிடிக்கவும்.


இருமலுக்கு:

மிளகு, அதிமதுரம், சித்தரத்தை, திப்பிலி (ஒரு சிறிது மட்டுமே). துளசியிலை இவற்றை அவித்து சாறு எடுத்து பனங்கற்கண்டுடன் ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தலாம்.


குப்பைமேனி:

குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும். இதையே தலைவலிக்கும் தடவி வர குணமாகும்

குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும்.

குப்பைமேனி வேரை கைப்பிடியளவு எடுத்து 500 மில்லி நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க மலச்சிக்கல் நீங்கும்.


நெல்லி

நெல்லியை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி, மூலநோய் நீங்கும்.

நாள்தோறும் ஒரு நெல்லிக்கனி தின்றால் இதயக் கோளாறுகள் நீங்கும். நரம்புத் தளர்ச்சி, இளநரை, தோல் சுருக்கம் போன்றவை குணமாகும்.

உலர் நெல்லியை நீரில் போட்டு ஊறவைத்து இந்நீரில் கண்களைக் கழுவி வர கண்நோய்கள் குணமாகும்.


மிளகு

ஒரு தேக்கரண்டி மிளகை லேசாக வறுத்து ஒன்றிரண்டாய் தட்டி நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட பசியின்மை தீரும்.

தலைவலி அதிகமாக இருப்பின் உப்பையும், மிளகையும் நன்கு அரைத்து தலையில் பற்றிட குணமாகும்.

சந்தனம், மிளகு, கற்பூரம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துப் பூசி வர சொறி, சிரங்கு எளிதில் குணமாகும்.


அஜீரணம்

சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகவில்லை என்றால் மருந்து, மாத்திரை தேட வேண்டாம். ஏலரிசியுடன், ஓமம், சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை பொடி செய்து, அதில் ஒரு தேக்கரண்டி அளவு உட்கொள்ள வேண்டும். இவ்வாறு உட்கொண்டால் அஜீரணக் கோளாறு விலகிவிடும்.

0 comments:

Post a Comment