Wednesday, August 20, 2014
வீட்டு வைத்தியம் - 1
சளிகட்டு நீங்க
தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிகட்டு நீங்கும்.
தலைவலி, மூக்கடைப்பு நீங்க
நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி 1/2 லிட்டர் சாறு எடுத்து அதில் அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணையை கொதிக்க வைத்து அதில் நெல்லி சாறு கலந்து கொதிக்க வைத்து கொண்டு மூக்கில் நுகர தலைவலி போகும்.
சளித் தொல்லை நீங்க:
ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டுப் புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும்.
கபம் நீங்கி உடல் தேற:
கா¢சலங்கன்னி செடியை வேருடன் பிடுங்கி அலசி நிழலில் உலர்த்தி பொடியாக்கி 100 கிராம் வறுத்து 5 கிராம் தினமும் காலை, மாலை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட சுபம் நீங்கி உடல் தோறும். மருந்து சாப்பிடும் காலத்தில் புலால் சாப்பிடக் கூடாது.
இளைப்பு, இருமல் குணமாக:
விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இளைப்பு, இருமல் குணமாகும்.
தும்மல் நிற்க:
தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்
நாக்கில் புண் ஆற :
அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து குழு நீரில் போட்டு அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும்.
குடல் புண் ஆற:
வில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.
உடல் வலிமை பெற :
அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும்.
அஜீரணம் சரியாக:
ஒரு டம்பளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் இம்மூன்றையும் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க நிவர்த்தியாகும்.
இரும்புச் சத்துக்கு:
மாதுளம்பழச் சாற்றில் பால் சேர்த்து சாப்பிட்டால் நிறைய கிடைக்கும்.
சிறுநீரக கோளாறு:
முள்ளங்கியை சாறு எடுத்து தினமும் காலை, மாலை 30 மி.லி. சாப்பிட நீங்கும்.
படர்தாமரை, முகப்பரு:
சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவி விரைவில் குணமாகும்.
முகச்சுருக்கம்
முட்டைக்கோஸ் சாறை முகத்தில் தடவிவர மறைந்துவிடும்.
முகம் அழகுபெற :
துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்துக் காயவிட்டு குளித்துவரவும்.
உடல் மினுமினுக்க :
நீல புஷ்ப தைலம் தேய்த்துக் குளித்துவர உடல் குளிர்ச்சி பெறும். உடம்பும் மினுமினுப்படையும்.
உடல் உஷ்ணத்தைக் குறைக்க :
மல்லிகைப்பூவை அதிகமாக பயன்படுத்தக்கூடாது.
முடி அடர்த்தியாகவும், கருப்பாகவும் வளர : கருவேப்பிலையை அரைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வர பயன் விரைவில்.
கண்கள் குளிர்ச்சியடைய :
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவும்.
படர்தாமரை நீங்க :
சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவி, ஊறிய பின் கழுவினால் விரைவில் குணமுண்டாகும்.
வழுக்கை மறைந்து முடிவளர :
அல்லி இதழ்களை சந்தனத்துடன் அரைத்து வழுக்கைக்கு தடவி 2 மணி நேரம் காயவிட்டு குளிக்கவேண்டும்.
நரைமுடி கருப்பாக :
தாமரைப் பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.
முடி உதிர்வது நிற்க :
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர விரைவில் குணமாகும்.
சீத்தாப்பழக் கொட்டையை காய வைத்துப் பொடியாக்கி சீயக்காய்த் தூளுடன் கலந்து தேய்த்துக் குளிக்கவும்.
ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.
தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும் மிகவும் நல்லது.
தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.
குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.
மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.
* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால், இருமல் உடனே நிற்கும்.
* எலுமிச்சம்பழத்தின் சாறை ஓரிரு துளிகள் காதில் விட காது வலிதீரும்.
* குடல்புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திகீரை நல்ல உணவு.
* தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.
* அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.
0 comments:
Post a Comment