Tuesday, August 26, 2014

// // Leave a Comment

பித்தப்பை கல்



அறிகுறிகள்:

வலது பக்கம் மேல் வயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்படும். இந்த வலி, சில நிமிடங்கள் முதல், நான்கு மணி நேரம் கூட நீடிக்கும்.

 
இதர அறிகுறிகள்

காய்ச்சல், விட்டுவிட்டு வலி, அதிவேக இதயத் துடிப்பு

மஞ்சள் காமாலை (சருமம் மற்றும் கண் மஞ்சள் நிறத்தில் மாறியிருப்பது), தோலில் அரிப்பு, வயிற்றுப்போக்கு

வாந்தி, குமட்டல், குளிர் காய்ச்சல் அல்லது நடுக்கம்

குழப்பம், பசி இன்மை, அடர் நிறத்தில் சிறுநீர் மற்றும் மலம் வெளியேறுதல் , வலது தோள்பட்டையில் வலி

 
தப்பிக்க

பித்தப்பை கல் வராமல் தடுக்க முடியாது. ஆனால், வாய்ப்பைக் குறைக்க முடியும்.

 
உணவு

தினமும் சரியான நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும். உணவைத் தவிர்ப்பது பித்தப்பை கல் உருவாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

எடை குறைக்க அவசரம் வேண்டாம்: உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க வேண்டும். மிக வேகமாக குறைக்க முயற்சிக்கும்போது பித்தப்பை கல் உருவாவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். வாரத்துக்கு அரை முதல் ஒரு கிலோ வரை எடை குறைப்பதே ஆரோக்கியமானது.

0 comments:

Post a Comment