Tuesday, August 22, 2017
வயிற்று கோளாறுகளை சரி செய்யும் கடுக்காய்
கடுக்காய் அதிக மருத்துவ தன்மைகள் கொண்ட மருத்துவப்பொருள். இது பழங்காலமாக மருத்துவத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கடுக்காய் எளிதில் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்க கூடியது. இது சூரணமாகவும் கூட கிடைக்கிறது. கடுக்காய் வறட்சி, பசியின்மை, தோல் நோய்கள், குடல் புண்கள், காமாலை, பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்ற பலவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.
வயிற்றுப்போக்கு
கடுக்காய் தூளை 1/2 தேக்கரண்டி அளவு எடுத்து, மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நீங்கும். இதனை தினமும் இரண்டு வேளைகள் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
மலச்சிக்கல்
கடுக்காய்த்தூளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து, ஏழு நாட்களுக்கு இரவில் மட்டும் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் தீரும்.
பல் வலி
கடுக்காய் தூளை சரிபாதியளவு உப்புடன் சேர்த்து பல் துலக்கி வந்தால் ஈறுகளில் உள்ள வலி, பற்களில் உள்ள வலிகள், பல் ஈறுகளில் இரத்தம் கசிதல் ஆகியவை குணமாகும்.
திரிபலா சூரணம்
திரிபலா சூரணம் நாட்டு மருந்து கடைகளில் எளிதில் கிடைக்க கூடிய ஒன்றாகும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவற்றின் கலவையே திரிபலா சூரணம் ஆகும்.
பயன்கள்
இந்த திரிபலா சூரணத்தை வெந்நீரில் இட்டு காய்ச்சி பருகி வந்தால், புளிச்ச ஏப்பம், செரியாமை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகள் முற்றிலும் குணமாகும்.
0 comments:
Post a Comment