Tuesday, July 18, 2017

// // Leave a Comment

அப்பப்போ உங்க கண்ணுல புழு நெளியிற மாதிரி தெரியுதா? அது என்னனு தெரியுமா?


பல தடவை நீங்கள் இதை கண்டிருக்கலாம், சில சமயம் இது என்ன, ஏது, ஏன் தோன்றுகிறது என்ற சந்தேகங்களும் எழுந்திருக்கலாம். சிலர் இதை ஏதோ கோளாறு என்று கூட எண்ணி அச்சம் கொள்ளலாம்.

ஆம், உங்கள் கண்களில் சில சமயத்தில் ஏதோ நுண்ணிய புழுக்கள் போல நெளிவதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள், அது என்ன? ஏது? ஏன் இப்படி கண்களில் தோன்றுகிறது, எதனால் இது நடக்கிறது என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழுந்தால், இதோ அதற்கான பதில்...


முஸ்காய் வாளிடான்டஸ் [ Muscae Volitantes ]

உங்கள் கண்களில் அவ்வப்போது திடீரென ஏதோ நுண்ணிய புழு போல ஏதோ நெளிவது போல தெரியும். கண்களை கசக்கினாலோ, அல்லது பார்வையை வேறுபுறம் அகற்றினாலே அது சற்று நேரத்தில் மறைந்துவிடும். இதன் ஆப்ஜெக்ட்டின் பெயர் முஸ்காய் வாளிடான்டஸ்.


அசௌகரியம்

முஸ்காய் வாளிடான்டஸ்-ஐ ஃப்ளையிங் ஃப்ளைஸ் என்றும் குறிப்பிடுகின்றனர். இது கண்களில் தோன்றுவது மிகவும் இயல்பானது. இது ஏதோ கிருமி அல்லது நச்சு அல்ல. இது வெளிப்புற ஆர்கன் அல்ல. இது நமது கண்களின் உட்புறத்தில் இருக்கும் ஒன்று தான்.


உருவ மாற்றம்

இது உருவ மாற்றம் ஏற்படுத்திக் கொண்டிருப்பது போன்ற காட்சியளிக்கும். ஆனால், இவற்றுக்கு உயிரல்ல. கண்களுக்கு -பின்னால் லைட் சென்ஸிடிவ் திசுவாக இது இருக்கிறது.


இரத்தம், புரதம்

இதன் உருவாக்கம் ஒருவகையான திசு, இரத்த அணுக்கள் மற்றும் புரதம் கொண்டு உருவானதாய் அறியப்படுகிறது. இவை கண்களின் அசைவிற்கு ஏற்ப அங்கும், இங்கும் பவுன்ஸ் ஆகும் தன்மை கொண்டுள்ளன.


ரெட்டினா

ரெட்டினாவிற்கு தொலைவில் இருக்கும் போது இவை பெரிதாக அசௌகரியமாக தென்படாது. ஆனால், ரெட்டினாவிற்கு அருகில் செல்லும் போது கண்களுக்கு புலப்படும்.


நிலையான ஒளிமிக்க தளம்

மிக ஒளி மிகுந்த தளங்களில், எடுத்துக்காட்டாக கம்பியூட்டர் திரை, தெளிவான நீல வானம் போன்றவற்றை நீங்கள் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் போது இது தென்படும்.


குட்டி, குட்டி ஒளி நட்சத்திரங்கள்

சில சமயங்களில் இதை போலவே, மிகுந்த ஒளியுடன் எதையாவது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது கண் முன்னே ஏதோ குட்டி, குட்டி ஒளி நட்சத்திரங்கள் போல தோன்றும். இவை ப்ளூ ஃபீல்ட் என்டோபிக் ஃபினாமெனன் (Blue Field Entopic Phenomenon) என அழைக்கப்படுகிறது.


நேரெதிர்

இவை முஸ்காய் வாளிடான்டஸ்-க்கு நேர் எதிரானவை என அறியப்படுகிறது. இதுவும், ஒளியின் மிகுதியான செயல்பாட்டின் போது வெள்ளை அணுக்களின் இடர்பாடுகள் காரணமாக கண்களுக்குள் உண்டாகும் ஒரு செயல் தான்.


மருத்துவ பரிசோதனை!


ஒருவேளை முஸ்காய் வாளிடான்டஸ் மிகப்பெரிய அளவில் தென்பட ஆரம்பித்தால் நீங்கள், மருத்துவரிடம் பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது. இது ஏதேனும் அபாயமாக கூட இருக்கலாம்.

0 comments:

Post a Comment