Saturday, April 30, 2016

// // Leave a Comment

கருப்பட்டி இட்லி [ மறந்து போன மருத்துவ உணவுகள் ]



தேவையானவை

இட்லி அரிசி - கால் கிலோ
கருப்பட்டி - அரை கிலோ
தேங்காய்த் துருவல் - தேவையான அளவு.


செய்முறை

அரிசியை ஊறவைத்து, உப்பு சேர்க்காமல் இட்லி மாவுபோல் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். மறுநாள் காலையில் மாவில் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலக்கவும். கருப்பட்டியைக் கெட்டியாகப் பாகு காய்ச்சி, வடிகட்டி மாவில் ஊற்றிக் கிளறவும். இந்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி வேகவைத்தால், கருப்பட்டி இட்லி தயார். இந்த மாவையே பயன்படுத்தி தோசையும் சுடலாம்.


மருத்துவப் பயன்

மூட்டு வலியைப் போக்கும். சோர்வை நீக்கிச் சுறுசுறுப்பு தரும். குடல் புண், வாய்வு, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் நீங்கும்.
Read More

Friday, April 29, 2016

// // Leave a Comment

தூதுவளைத் துவையல் [ மறந்து போன மருத்துவ உணவுகள் ]


தேவையானவை 

முள் நீக்கிய தூதுவளை இலை - 50 கிராம்
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 5 கிராம்
உப்பு, புளி, எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தூதுவளை இலையை நன்றாக வதக்கவும். அதனுடன் மற்றப் பொருட்களை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும்.


மருத்துவப் பயன்

சளிப்பிரச்னைக்கு அருமையான மருந்து இது. நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக் குறைவு, தொண்டைச் சதை வளர்ச்சி போன்ற பிரச்னைகளையும் தீர்க்கும்.
Read More

Thursday, April 28, 2016

// // Leave a Comment

உளுந்துக் களி [ மறந்து போன மருத்துவ உணவுகள் ]

தேவையானவை

பச்சரிசி - கால் கிலோ
கறுப்பு உளுந்து - 100 கிராம்
மிளகு - 20
சீரகம் - கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - தேவையான அளவு.


செய்முறை

பச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாக ஊறவைத்து, ஒன்றாகச் சேர்த்துக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாகத் தட்டி, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்த மாவில் கலக்கவும். பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, மாவை சிறிது சிறிதாகக் கொட்டி அடிப்பிடிக்காமல் கிளறவும். களிப் பதம் வந்ததும் நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறி இறக்கவும். இந்தக் களி, கருப்பட்டிப் பாகில் தொட்டுச் சாப்பிட அருமையாக இருக்கும்.


மருத்துவப் பயன்

இடுப்பு எலும்பு வலுப் பெறுவதற்காக, பெண்கள் வயதுக்கு வரும்போது இந்தக் களியைச் செய்து கொடுப்பது வழக்கம். பிரசவத்தை எதிர்கொள்ளும்போது இடுப்புக்கு வலு சேர்ப்பதற்காக இதைப் பெண்களுக்கு செய்து கொடுப்பர். கை, கால், முதுகில் ஏற்படும் வலியையும் போக்கும்.
Read More

Wednesday, April 27, 2016

// // Leave a Comment

கொள்ளுப்பொடி [ மறந்து போன மருத்துவ உணவுகள் ]

தேவையானவை

கொள்ளு - கால் கிலோ
பூண்டுச் சாறு - 100 மி.லி
காய்ந்த மிளகாய் - 5
மிளகு - 10 கிராம்
காய்ந்த கறிவேப்பிலை - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு.


செய்முறை

கொள்ளைச் சுத்தம்செய்து, பூண்டுச் சாறுடன் கலந்து மூன்று நாட்கள் வெயிலில் வைக்க வேண்டும். சாறு முழுவதும் சுண்டிய பிறகு, கொள்ளு, காய்ந்த மிளகாய், மிளகு இவற்றை லேசாக வறுத்து, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துத் தூளாக்கிக்கொள்ளவும்.

சாதத்தில் சிறிதளவு பொடி சேர்த்து நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் ஏற்ற உணவுப் பொடி.





மருத்துவப் பயன்

உடல் பருமன், வாயுத் தொல்லை, மாதவிடாய் பிரச்னைகளைத் தீர்க்கும்.
Read More

Tuesday, April 26, 2016

// // Leave a Comment

வாயுத்தொல்லை நீங்க

வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண்கள் ஆறும்.

மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

சுக்கு மல்லி (தனியா) கசாயம் வாயுக்கு நல்லது.

பசும்பாலில் 10 பூண்டு பற்களை சேர்த்து காய்ச்சி குடித்தால் வாயு சேராது.

இஞ்சியை அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்க அனைத்துவித வாயுக்கோளாறும் தீரும்.

புதினாக்கீரையை நெய் விட்டு வதக்கி, இதனுடன் உப்பு, புளி, மிளகாய், தேங்காய் சேர்த்து துவையல் செய்து உணவுடன் சாப்பிட்டு  வர வாயு அகலும்.

வெந்தயக்கீரை, தூதுவளைக்கீரை, வள்ளக்கீரை, முடக்கத்தான்கீரை போன்ற கீரைகள் வாயுவைப் போக்கும்.

சமைக்கும் போது இஞ்சி, பெருங்காயம் சேர்த்து சமைப்பது வாயுவைக் குறைக்கும்.

முடக்கற்றான் கீரையை கைப்பிடி அளவு 1 கோப்பை தண்ணீரில் வேக வைத்து அந்த சாற்றுடன் சிறிது விளக்கெண்ணை விட்டுப் பருக வயிற்றில் உள்ள வாயு வெளியேறும்.

தினமும் பெருங்காயத்தை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் வராது. மலச்சிக்கலை  நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.

இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

ஓமம், கடுக்காய், வால்மிளகு, வெள்ளைப் பூண்டு, மிளகு, சுண்டைக்காய், சாதிப் பத்திரி, வெங்காயம் போன்றவைகளும் வாயுவைப் போக்கும்.
Read More

Sunday, April 24, 2016

// // Leave a Comment

பானகம்


முன்னோர்கள் சொன்ன உணவே மருந்து

வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானகம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்.

பானகம் என்பது இனிப்பு, புளிப்பு, லேசான காரம் என மூன்று சுவைகளும் ஒன்றாகக்கலந்த ஒரு பானம். வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் நீராகாரம். உடலின் களைப்பை நீக்கி குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடிய பானம். இது அடுப்பில்வைத்து காய்ச்சாமல் அப்படியே கலக்கி பருகக்கூடிய பானவகையைச் சேர்ந்தது.(Raw and Uncooked).

தேர்த்திருவிழாவன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி தேரை வடம்பிடித்து இழுத்துவருவார்கள். வேர்க்க, விறுவிறுக்க தேர் இழுத்துவரும் பக்தர்களுக்காக பானாக்கம் வீட்டிற்கு வீடு தயாரித்துக் கொடுப்பார்கள். தாகமும், களைப்பும் தீரும் அளவுக்கு வயிறு நிறைய வாங்கி, வாங்கி பருகுவார்கள். இனிப்பும், புளிப்பும் கலந்த இந்த பானாக்கம் உள்ளே சென்றதும் உடலின் மொத்த களைப்பும் நீங்கி புதுத்தெம்புடன் தேரை இழுத்து கோவிலுக்கு கொண்டு சேர்ப்பார்கள். நீங்கள் இதுவரை பானகம் குடித்திராத நபராக இருந்தால் ஒருமுறை தயாரித்து சுவைத்துப்பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் பிடித்துவிடும். இனிப்பும், புளிப்பும் கலந்த இந்த பானத்தின் சுவை உங்களை மீண்டும் மீண்டும் பருகத்தூண்டும்.


தேவையான பொருட்கள் :

புளி - சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை
வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/4 டீ ஸ்பூன்
சுக்குப்பொடி - 1/4 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீ ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்


செய்முறை :

வெல்லத்தை தட்டி பொடியாக்கிக்கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும். கரைத்த புளிநீரில் வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரையும்படி ஸ்பூன் கொண்டு கலக்கிவிடவும். வெல்லம் முழுமையாக கரைந்தபின் வடிகட்டியால் இறுக்கவும். இதனுடன் ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். இதை அப்படியே அல்லது சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகவும். மிளகு மற்றும் சுக்கு தொண்டைபிடிப்பை குணமாக்கும் நல்ல மருந்து. சளியையும் குணப்படுத்தும். கோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானகம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்
Read More

Thursday, April 21, 2016

// // Leave a Comment

இளநரை நீங்க இதை முயற்சி பண்ணி பாருங்க

தற்போதைய தலைமுறையினருக்கு வெள்ளை முடி இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. இதற்கு சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம், பரம்பரை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், முடிக்கு போதிய பராமரிப்பு வழங்காததும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் பலரும் வெள்ளை முடியை மறைக்க பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர போகாது அப்படியே இருக்கும்.

அதுமட்டுமின்றி, வெள்ளை முடியை மறைக்க கண்ட கண்ட பொருட்களை வாங்கி முடிக்கு தடவுவதால், பல்வேறு அலர்ஜிகளும் ஏற்படுகின்றன. ஆகவே இவற்றையெல்லாம் தவிர்க்க, இயற்கை முறையில் வெள்ளை முடியை எப்படி கருமையாக்குவது என்று யோசியுங்கள். இங்கு வெள்ளை முடியை இயற்கை முறையில் எப்படி கருமையாக்குவது என்று ஒருசில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.


தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.


ஹென்னா

ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.


நெல்லிக்காய்

நெல்லிக்காயை வெட்டி, வெயிலில் உலர்த்தி, பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து வந்தால், வெள்ளை முடி மறைவதை நன்கு காணலாம்.


கறிவேப்பிலை

கறிவேப்பிலை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அததனை தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், முடியில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.


வெந்தயம்

வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி ஊற வைத்தோ அல்லது அதனை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசியோ வந்தால், நரை முடி மறையும்.


நெய்


நெய் கூட வெள்ளை முடியை மறைய வைக்கும். அதற்கு நெய்யை ஸ்கால்ப்பில் படும் படி நன்கு மசாஜ் செய்து, அலச வேண்டும். இந்த முறையால் பலன் சற்று தாமதமாக கிடைக்கும். இருப்பினும் இந்த முறையால் நிரந்தரமாக வெள்ளை முடி வருவதைத் தடுக்க முடியும்.


மிளகு

தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதன் மூலமும் வெள்ளை முடி மறையும்.


ப்ளாக் டீ

1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், வெள்ளை முடியை விரைவில் போக்கலாம்
Read More

Monday, April 18, 2016

// // Leave a Comment

நன்னாரி மருத்துவ பயன்கள்

நன்னாரி வேர் இனிப்பும், சிறு கசப்பும் சேர்ந்த சுவையானது. குளிர்ச்சியான தன்மை கொண்டது. வியர்வை, சிறுநீர் ஆகியவற்றைப் பெருக்கும். தாது வெப்பத்தை அகற்றும். உடலைத் தேற்றும். உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும். வண்டு கடி, நீரழிவு, கிரந்தி, காய்ச்சல் போன்றவற்றையும் குணமாக்கும்.

நன்னாரி கொடி வகையைச் சார்ந்தது. எதிர் அடுக்கில் குறுக்கு மறுக்காக அமைந்த நீளமான அகலத்தில் குறுகிய இலைகளைக் கொண்டது. கம்பி போன்ற வளைந்து படரும். நன்னாரி மலர்கள், மஞ்சள் அல்லது கருஞ்சிவப்பு நிறமானவை. நன்னாரி செடிச்சாறு பால் போன்றது. நன்னாரி வேர்கள் நறுமணமுள்ளவை. மருத்துவத்தில் பயன்படுபவை.

நறுக்கு மூலம், நறுநீண்டி, நறுநெட்டி, பாதாளமூலி, பாற்கொடி, கிருஷ்ணவல்லி ஆகிய மாற்றுப் பெயர்களும் நன்னாரி தாவரத்திற்கு உண்டு. நன்னாரி தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் தானே விளைகின்றது. சமவெளிகள், முட்புதர் காடுகள் மற்றும் கடற்கரையோரங்களில் அதிகமாகக் காணப்படும்.

மலைப் பகுதியில் வளரும் நன்னாரியின் வேர் தடிப்புடன் பெரியதாக இருக்கும். நன்னாரி வேரின் மருத்துவ உபயோகம் மற்றும் நறுமணப் பயன்கள் கருதி பெருமளவில் பயிர் செய்யப்படுகின்றது. இது காய்ந்த நிலையில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

ஒரு பிடி பசுமையான நன்னாரி வேரைச் சேகரித்து, நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு, இடித்து, நீரில் இட்டு கொதிக்க வைத்து இரசம் வைக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரை சேர்த்து, வெறும் வயிற்றில் ½ டம்ளர் அளவு இரசத்தை குடிக்க எரிச்சலுடன் சிறுநீர் கழிப்பது குணமாகும்.

நன்னாரி வேர்த்தூள் 2 தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் பசும்பாலுடன் சேர்த்துக் கலக்கி குடிக்க சிறுநீர் கட்டு குணமாகும்.

நன்னாரி வேர்த்தூள் ஒரு பங்குடன் 25 பங்கு தண்ணீர் மற்றும் சர்க்கரை 50 பங்கு சேர்த்து மணப்பாகு செய்து 15 முதல் 25 மிலி வீதம் தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வர உடல் சூடு குறையும்.

பச்சை நன்னாரி வேர் 5 கிராம் எடுத்து நன்கு அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலக்கி குடிக்க வறட்டு இருமல் குணமாகும்.

நன்னாரி இரு வகைப்படும். வேர்கள் சிறியதாக உள்ள சிறு நன்னாரியின் பூக்கள் மஞ்சள் நிறமானவை. இலைகள் அகலத்தில் குறுகியவை. சமவெளிகள், புதர்காடுகளில் வளர்பவை.

மற்றொரு வகை, வேர்கள் பெரியதாக உள்ள பெரு நன்னாரியின் மலர்கள் கருஞ்சிவப்பு நிறமானவை. இலைகள் அகலத்தில் அதிகமானவை. மலைப் பகுதிகளில் சில இடங்களில் மட்டும் வளர்கின்றன.
Read More

Wednesday, April 13, 2016

// // Leave a Comment

மண்பானை குடிநீர்


"நீரின்றி அமையாது உலகு"


பத்து ஆண்டுகள் முன்பு நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம். நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருள்கள் கிடைத்தது, உலகமையமாக்கள் கொள்கையால் குடிநீர் இன்று ஆண்டிற்கு 6000 கோடி ருபாய் ஈட்டும் வணிக பொருளாக இன்று மாறியுள்ளது.

இந்திய முழுவதுமாக பாட்டில் குடிநீர், கேன் வாட்டர் என அன்னிய கார்ப்ரேட் நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பு குடிநீர் என்று விளம்பரம் படுத்தப்படுறது. இவ்வாறு பயன்படுத்தபடும் குடிநீரில் நாம் உடலுக்கு தேவையான தாது பொருள்கள் நிறைந்தவையா என ஆராய்ந்தால் இல்லையொன்ற பதில் மட்டுமே வருகிறது.

RO மற்றும் IV தொழில்நுட்பம் மூலம் தாதுப் பொருள்களை பிரித்து வெறும் சக்கை குடிநீராக கேனில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த குடிநீரை உயிரோட்டமுள்ள நீராக மாற்றவும் மாறி வரும் கால நிலைக்கேற்ப்ப இந்த கோடையில் தொற்று நோய்களை தடுக்க, இதை முயற்சி சொய்யலாம்.

மிளகு 25 கிராம்
சீரகம் 25 கிராம்
தேத்தாங்கொட்டை 1
வெட்டி வேர் சிறிது
வெந்தையம் 20 கிராம்

இவைகளை துணியில் வைத்து கட்டி 15 லிட்டர் தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம், மண் பாணை மிகவும் நல்லது.
Read More

Friday, April 1, 2016

// // Leave a Comment

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திப்பிலி

திப்பிலி கொடி வகையை சார்ந்தது. கொடியில் காய்க்கும் காய்தான் திப்பிலி என்றழைக்கப்படுகிறது. செடியின் வேரும் மருத்துவகுணம் வாய்ந்ததாக இருக்கிறது. அவை சிறு முடிச்சுகளுடன் நீண்டு மெலிதாக காணப்படும். அதனை கண்டந்திப்பிலி என்று அழைக்கிறோம்.

திப்பிலி, காரம் மற்றும் லேசான இனிப்பு சுவையுடையது. உடல் சூட்டை அதிகரிக்க கூடியது. வாதம் மற்றும் கப நோய்களை தீர்க்கும் சக்தி கொண்டது.

நுரையீரல் மற்றும் தலையின் சைனஸ் பகுதிகளில் தேங்கிய சளியை அகற்ற உதவுவதால் இதற்கு ‘கோழையறுக்கி’ என்ற சிறப்பு பெயரும் உண்டு.

திப்பிலி பசியை தூண்டும். இருமல், ஜுரம், தோல் நோய்கள், மூட்டு வலி, மூல தொந்தரவு, கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கங்களை நீக்க உதவுகின்றது. சிறந்த குரல் வளத்தை பெற துணைபுரியும். ரத்த சோகையை நீக்கும். மூளை தாதுகளை பலப்படுத்தும். ஆண்மை சக்தியை அதிகரிக்கச்செய்யும்.

 திப்பிலி மிளகை விட காரமானது. உடலுக்குள் அதி வேகமாக செயல்பட்டு வளர்சிதை மாற்றங்களை மேம்படுத்தும். உடலில் அதிக நேரம் வெப்பத்தை தேக்கி, உடலுக்கு சூட்டை அளித்து, ஊக்கியாக செயல்படும். நிணநீர் நாளங் களையும் சுத்தம்செய்யும்.

சுக்கு, மிளகு, திப்பிலி சேரும் திரிகடுகு சூரணத்தில் முக்கியமான கூட்டுப் பொருளாக திப்பிலி விளங்குகிறது. திப்பிலியை எந்த மருந்தில் சேர்த்தாலும் அதன் செயல் திறன் அதிகரிக்கும். அதனால் அதனை பல்வேறு முக்கிய சித்த மருந்துகளில் சேர்க்கிறார்கள்.

குளிர் காலத்தில் உண்டாகும் ஆஸ்துமா, மூக்கடைப்பு, நீரேற்றத்தால் உண்டாகும் தலைவலி மற்றும் மூட்டு வலிகளுக்கு திப்பிலி சிறந்த மருந்தாக திகழ்கிறது. சிறுவர்களுக்கு ஆஸ்துமாவால் உண்டாகும் மூச்சிரைப்பு, ஒவ்வாமை காரணமாக உண்டாகும் தொடர் தும்மலுக்கு 2 கிராம் திப்பிலி பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வெதுவெதுப்பான நீர் அருந்தவேண்டும். பெரியவர்கள் 2 கிராம் திப்பிலி பொடியை வெற்றிலையில்வைத்து தேன் கலந்து மென்று சாப்பிடவேண்டும்.

கல்லீரல், மண்ணீரல் வீக்கம் கொண்டவர்கள் 100 கிராம் திப்பிலியை வறுத்து பொடி செய்து, 100 கிராம் கரிசலாங்கண்ணி கீரை பொடியுடன் கலக்க வேண்டும். அத்துடன் 100 கிராம் பொடித்த நெற்பொரி, 100 கிராம் நாட்டு சர்க்கரை கலந்து வைத்துக்கொள்ளுங்கள். இதனை காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்விக்கலையும் இது குணப்படுத்தும்.

திப்பிலி உஷ்ண தன்மை கொண்டதாக இருப்பதால், பெண்களுக்கு ஆரோக்கியமான சினைமுட்டை உருவாவதற்கு உதவி புரிகிறது. 2 கிராம் திப்பிலி பொடியை 1/2 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய்யில் கலந்து மாதவிடாய் ஏற்பட்ட இரண்டாம் நாளிலிருந்து ஆறுநாட்கள் சாப்பிட்டால் ஆரோக்கியமான சினைமுட்டை உருவாகும். இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வெதுவெதுப்பான நீர் அருந்தவேண்டும்.

மூட்டு வலிக்கு திப்பிலி பொடி 2 கிராம் எடுத்து 100 மி.லி. பாலில் கலந்து தினமும் பருகவேண்டும். 30 நாட்கள் பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

உடல் வலி, முதுகுவலி மற்றும் வாத நோய்களுக்கு கண்டந்திப்பிலி 5 கிராம் அரைத்து பாலில் கலந்து குடிக்கவேண்டும்.

திப்பிலி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது. காய கற்ப மூலிகை. ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை நோய்களுக்கு சிறந்த முதலுதவி மருந்தாக இது செயல்படுகிறது. திப்பிலியில் தயாரிக்கப்படும் ‘திப்பிலி ரசாயனம்’ என்ற மருந்து ஆஸ்துமா, மூக்கடைப்பு, சைனஸ் தலைவலிக்கு சிறந்தது. 3 கிராம் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வரவேண்டும்.
Read More