Monday, March 2, 2015

// // Leave a Comment

திப்பிலி

சளி, இருமல். இளைப்பு போன்ற போன்றவை, தீராத நோய் என்று சொல்வதற்கில்லை. எல்லோருக்கும் எல்லா வயதினருக்கும் வரக்கூடியதாகும். இதற்கு இங்கிலீஸ் மருந்துகளை விட, இயற்கையாக கிடைக்கும் மூலிகை வகை மருந்துகள், சிறந்த நிவாணமாகும். இதில், சளியை கோக்கும் இயற்கை மருந்தாக திப்பிலி பயன்படுகிறது.

திப்பிலி என்பது அரிய வகை மூலிகை மருந்து வகைகளில் ஒன்றாகும். எல்லா நாட்டு மருந்து கடைகளிலும், எளிதாக கிடைக்கும். இது மணமுடைய மெல்லிய தண்டு கொடி வகையை சார்ந்தது. வெப்பமான பகுதிகளில் வளரும், இயல்புடைய தாவரமாகும். இந்தியாவில் அஸ்ஸாம், மேற்கு வங்காளம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் கேரளாவில் அதிகம் வளர்கிறது. திப்பிலியில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் கொண்டது. இது பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாக பயன்படுகிறது.

கனியும், வேரும் மருந்தாக பயன்படுகின்றன. நாட்டு மருந்து கடைகளில் அதிகம் கிடைக்கும் திப்பிலி, மூச்சு உறுப்புகளின் நோய்கள், வயிற்றுப்போக்கு, தோல் நோய்கள், பித்தநீர்ப்பை நோய்கள், ஆகியவற்றை போக்க பயன்படுத்தப்படுகிறது.


சளித் தொல்லையை குணப்படுத்தும்

திப்பிலி பொடியை சிறிதளவு எடுத்து, தேனில் கலந்து, இரு வேளை கொடுத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள, தொண்டை கட்டு, கோழை, குரல் கம்மல், உணவில் சுவையின்மை ஆகியவை தீரும். இதை சிறிதளவு எடுத்து, வெந்நீரில் போட்டு, காய்ச்சி வடித்து குடித்தாலும் அனைத்து வியாதிகளும் நீங்கும். தேனுடன் கலந்த பொடி சளி, இருமல், ஆஸ்துமா, விக்கல் ஆகியவற்றை குணப்படுத்தும். திப்பிலி கனி, வேர் மற்றும் மிளகு, இஞ்சி ஆகியவை சமஅளவு கலந்த கலவை, குடல்வலி, உப்புசம், இருமல் மற்றும் தொண்டை கரகரப்பு போக்க வல்லது.


குடல்புழுவை அகற்றும்

மிளகுடன் கலந்த திப்பிலி பொடி, மயக்கம் மற்றும் உணர்வின்மையின் போது உணர்வை தூண்டும் மருந்தாக பயன்படுகிறது. குழந்தை பெற்ற பெண்களுக்கு, இளம் சூடான நீரில் திப்பிலி பொடியை கலந்து கொடுப்பதால், ரத்தப்போக்கு மற்றும் காய்ச்சல் குணமாகும். குழந்தைகளின் குடலில் உண்டாகும் புழுக்களை அகற்ற, திப்பிலி பொடி சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

தொடர்ந்து சளித்தொல்லையால் அவதிப்படுவர்கள், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும், திப்பிலியை பயன்படுத்தினால் உடனே சளி நீங்கும் இதனால், எந்த பக்க விளையும் ஏற்படாது. மேலும், சுவாச குழாயில் எற்பட்டுள்ள, நாள் பட்ட சளி அடைப்புகள் நீங்கி சுவாச புத்துணர்வு ஏற்படும்.

0 comments:

Post a Comment