Tuesday, January 6, 2015

// // Leave a Comment

சித்த மருத்துவ குறிப்புகள்

மேகரோகம் குணமாக

ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.


நீரழிவு நோய் குணமாக

மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்து கொள்ளவும். 1 ஸ்பூன் வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.


இரத்த பேதியை குணப்படுத்த

அத்திபட்டை, நாவல் பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை சமஅளவு பொடி செய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீதபேதி பெரும்பாடு குணமாகும்.


மூட்டுவலி குணமாக

அத்திபாலை பற்று போட்டு வர மூட்டுவலி குணமாகும்.


நரம்பு தளர்ச்சி நீங்க


தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.


பற்கள் உறுதியாக இருக்க

மாவிலையை பொடி செய்து பல் துலக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.


சேற்றுபுண் குணமாக

காய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வர சேற்றுபுண் குணமாகும்.


ஆண்மை குறைவு நீங்க

அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட ஆண்மை பெருகும்.


மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த

வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400, பசுநெய், அதி மதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனை நாள்தோறும் 1 கரண்டி 6 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.


வயிற்றுவலி குணமாக

குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.


முடி உதிர்வதை தடுக்க

முடி உதிர்வதை தடுக்க வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து மறுநாள் வேகவைத்து நீரை கொண்டு தலை முழுகி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும். பேன் நீங்கும்.

முடி உதிர்வதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. அவை உடல் சூடு, வைட்டமின் குறைபாடு, மற்றும் பரம்பரை காரணமும் முக்கிய பங்குண்டு. அதேநேரம் நீங்கள் உங்களின் தற்காப்பு உத்தியை செய்ய அதன் தாக்கம் குறைய வாய்ப்புண்டு.

நீங்கள் வாரத்திற்கு இருமுறை செம்பருத்தி இலையை தலையில் பூசி சிறிது நேரம் கழித்து தலைக்கு சோப்பு மற்றும் ஷாம்பூ போடாமல் குளித்து வர நல்ல பலன் கிடைக்கும். ஏனென்றால் செம்பருத்தி இலை குளிர் படம் கொடுக்கும் அதேநேரம் இது ஷாம்பூ போன்ற நுரைக்கும் தன்மை கொண்டது. எனவே ஷாம்போ, சோப்போ தேவையில்லை.

தலைக்கு நல்லெண்ணெய் வாரத்திற்கு ஒருமுறை தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும். அதே போல் உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்து வந்தால் உடல் சூடு குறையும்.


பேதியை நிறுத்த

பேதியை நிறுத்த வேப்பிலை மிகச்சிறந்த மருந்து. வேப்பிலையை சட்டியில் போட்டு சுருக்கி தீயும்படி கருக்கிய பின் இடித்து பொடியாக்கி வசம்பு துண்டையும் சுருக்கி பொடியாக வேப்பிலை 1 ஸ்பூன், வசம்பு ஒரு கால் ஸ்பூன் கலந்து உணவுக்கு முன் மூன்று வேலை குடிக்க வேண்டும். மூன்று வேலை சாப்பிட பேதி நிற்கும்.

வேப்பிலையும் வசம்பும் மிக மிக முக்கிய பங்கு உள்ளது. இரண்டும் உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்கும். வசம்பு வாய்வை அகற்ற உதவும். வேப்பிலை பூச்சிகளை அகற்றும் தன்மை வாய்ந்தது.

0 comments:

Post a Comment