Thursday, December 6, 2018

// // Leave a Comment

நெல்லிக்காய்யின் அற்புத சக்தி

தினமும் உட்கொள்ளும் நெல்லிக்காயனது அருமருந்தாகும். இது வாதம்,பித்தம், கபம், என்னும் திரிகரண தோஷங்களையும் போக்கவல்லது. இதனாலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதன் பெருமை பற்றி ஆயுர்வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. நமது முன்னோர்கள் இதனை ரசாயனம் என்றே அழைத்துள்ளனர்.

தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்பிகளில் எழுதி வைத்துள்ளனர். உடல் நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.

பெண்களோ நெல்லிக்காயினை சௌபாக்கியம் என்று கருதி கார்த்திகை மாதத்தில் உத்தரண துவாதசி அன்று துளசிச் செடியுடன் இணைந்து பூஜிக்கின்றனர். இதிலும் கடுக்காயைப்போலவே இதில் பல வகையுண்டு பெருநெல்லி, கருநெல்லி, அருநெல்லி, என்பது. இதில் கருநெல்லி கிடைக்காதது. மற்றவை கடைகளில் கிடைக்கும்.

ஐந்து சுவை கொண்டது

ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என்னும் ஐந்தும் நெல்லிக்காயில் உள்ளன. இதில் உள்ள இனிப்பும் உவர்ப்பும் பித்தத்தையும், புளிப்பு, கைப்பு, கபம் ஆகியவற்றையும் போக்க வல்லது.

உயிர்சத்துக்கள்

உயிர்ச்சத்துக்களான ஏ,பி,சி என்ற மூன்றும் அடங்கியுள்ளன. சாத்துக்குடிச் சாற்றில் உள்ள வைட்டமின் சத்து 20 மடங்கு இதில் உள்ளது. நெல்லிக்காய் வாடிய போதிலும் சிறிதளவும் குறைவதில்லை. நோயற்றவராக மனிதர் வாழ தினசரி 50 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து தேவை. இதற்கு 4 சாத்துக்குடி சாறோ, 8 அவுன்ஸ் தக்காளிச்சாறோ சாப்பிடவேண்டும். ஆனால் இந்த 50 மில்லிகிராம் வைட்டமின் சி அரை அவுன்ஸ் நெல்லிக்காயில் கிடைக்கிறது.

பித்தம் தணிக்கும்

ஜீரணக்கோளாறு, பித்த மயக்கம், ஆரோடசிகம், காமாலை, கண்நோய், இரத்தசோகை போன்றவைகளுக்கு நெல்லிக்காய் மருந்தாகும் இதனை ஊறுகாயாக செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் இதனால் பித்தம் தணியும் உணவு எளிதில் ஜீரணமாகும். நீண்ட நாட்களாகியும் ஆறாமல் இருக்கும் புண்கள் ஆறிவிடும். கட்டிகள் பழுக்கும். அப்போது அதனை அரைத்து விழுதாக்கி உருட்டி உலரவைத்து அதனை சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும். புழுபூச்சிகளை அகற்றிவிடும் சக்தி உள்ளது நெல்லிக்கனி.

கர்ப்பிணிகளுக்கு

நெல்லிக்காய் இரும்புச்சத்து உள்ளது இரத்தத்தைச் சுத்தஞ்செய்து இருதயத்தை வலுப்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் முதல் மாதம் தொட்டு 9 மாதங்கள் வரை காலை, மாலை, ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லி முள்ளி உட்கொண்டால் அடிக்கடி வரும் வாந்தி நிற்கும். நல்ல பசியும் எடுக்கும். நெல்லிக்காயில் உள்ள இரும்பு சத்தும், சுண்ணாம்பு சத்தும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், ரத்த விருத்தியையும், கர்ப்பிணிகளிடையே ஏற்படுத்துகிறது. மேலும் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கும் புஷ்டிகரமான ஆகாரம் கிடைக்கிறது.

நினைவாற்றல் கூடும்

பிறந்த குழந்தைகளின் உணவில் நெல்லிக்காய் சாற்றினைக் கொடுத்து வந்தால் வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள். மாணவர்கள் இதனை தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வை தெளிவாகும். புத்திக்கூர்மையை ஏற்படுத்தும். குழந்தைகளுக்குக் கோணலாக முளைத்த பற்களுக்கும், காலத்தில் முளைக்காத பற்களுக்கும் கூட நெல்லிக்காய் ஏற்றது. பல்லில் ஏற்படும் பயோரியா என்னும் வியாதிக்கு இது அருமருந்து. நெல்லியிலைச் சாற்றை கொப்பளித்து காயை உட்கொண்டால் உடன் வியாதி நீங்கும்.
Read More

Monday, April 16, 2018

// // Leave a Comment

மல்லி விதையை நீரில் ஊறவைத்து குடியுங்கள் நன்மைகள்

மல்லி விதை
சமையலில் சேர்க்கப்படும் மசாலா பொருட்களில் முக்கியத்துவம் வாய்ந்தது மல்லி.

இதில் விட்டமின் ஏ, விட்டமின் பி1, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரோட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ளது.

இதனை இரவு படுக்கும் முன் நீரில் ஊறவைத்து காலையில் எழுந்து குடித்து வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.
  • சர்க்கரை அளவை பராமரிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்தது, கொத்தமல்லி விதை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்கிறது. குறிப்பாக சர்க்கரை நோய் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படும் நபர்கள் இதனை குடித்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.
  • ஒரு வாரம் தொடர்ச்சியாக காலையில் எழுந்தவுடன் இந்நீரை குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
  • இதிலுள்ள விட்டமின் கே மற்றும் கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால், இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.
  • இதிலுள்ள போர்னியோல் மற்றும் லினாலோல், செரிமான செயல்பாட்டிற்கு உதவும், மேலும் வயிற்றுப்போக்கை உண்டாக்கும் பக்டீரியாக்களை அழித்து வயிற்று போக்கு பிரச்சனையை சரிசெய்யும்.
  • மாதவிடாய் சுழற்சி சீராக இல்லாமல் அவதிப்படும் பெண்கள் இதனை குடித்து வந்தால், சுழற்சி ஒழுங்குபடுத்தப்பட்டு அந்நேரத்தில் உண்டாகும் வயிற்று வலி, வாயுத் தொல்லை போன்றவை சரியாகும்.
Read More

Saturday, March 3, 2018

// // Leave a Comment

தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்


நெல்லிக்கனியில் உள்ள மருத்துவக் குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்று கூறுவதுண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது.

பச்சை நெல்லிக்காய், துளசி, கொட்டை நீக்கிய முற்றின கடுக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சமவிகிதத்தில் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதை வடிகட்டி, அதைவிட மூன்று மடங்கு அதிகமான அளவுக்கு தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும். இதை தினமும் கேசத்தில் தடவிவந்தால், முடி உதிர்வை தடுக்கும்.

நெல்லியின் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த பழத்திலும் இல்லை எனலாம். காயகல்பம் தயாரிப்பு நெல்லியால் தான் உருவாகிறது. தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக பயன்படுகிறது. வைட்டமின் C அதிக அளவில் உள்ளது. கண்களை அதன் இமை போல் நெல்லிச்சாறு பாதுகாக்கிறது.

நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் சாறு எடுத்து சாப்பிட்டு உயரிய ஆரோக்கியம் பெறலாம். ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்து உடனடியாக சுத்தமான குடிநீர் தயாரிக்கலாம்.

நெல்லிக்காய் சாறு தயாரித்து, அதைப் பருகுவதன் மூலம் ரத்தசோகை, குடல் புண், சர்க்கரைநோய், கண் நோய்களிலிருந்து விடுபடலாம். கொட்டை நீக்கப்பட்ட நெல்லிகனிகளை தண்ணீர்விட்டு நன்கு அரைத்து வடிகட்டி கிடைக்கும் சாற்றுடன் தேன் மற்றும் இளநீர் சேர்த்துப் பருகலாம்.

நரை முடி இன்றைக்குப் பெரும்பாலானவர்களுக்கு பெரும் தொல்லை தரும் விஷயமாக ஆகிவிட்டது. உடல்ரீதியாக பிரச்னை எதையும் இது தராது என்றாலும், மனதளவில் சிறு சங்கடத்தை ஏற்படுத்திவிடும். அதற்கு ஒரு வழி உண்டு. நெல்லிக்காய் சாறு மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு, அதில் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்த கலவையை இரவில் கூந்தலில் தேய்த்து, காலையில் கழுவிவிடலாம். விரைவில் கூந்தல் கறுப்பாக மாறும்.

தினமும் ஓர் நெல்லிக்கனி எனச் சாப்பிட்டு எளிதாக சத்துகளையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றுள்ளனர். நாமும் நெல்லிக்கனியை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.
Read More

Wednesday, February 28, 2018

// // Leave a Comment

வயிற்றைச் சுத்தமாக்கும் உணவுகள்


அஜீரணப் பிரச்சினை என்பது இன்று அதிகமான பேரை அவதிக்குள்ளாக்குகிறது. உண்ணும் உணவு ஒழுங்காக செரிக்காவிட்டால் உடல்நலத்துக்குப் பாதிப்பு ஏற்படும். வயிற்று வலி, புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டு சிரமத்தைத் தரும்.

எனவே வயிறு சுத்தம் என்பது அவசியம். அப்போது தான் செரிமான மண்டலத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும். பச்சைக் காய்கறிகள் வயிற்றைச் சுத்தமாக்கும். கீரைகள், செலரி, புராக்கோலி, பீன்ஸ் போன்ற உணவுகள் எளிதில் ஜீரணமாகும்.

அதேபோல கேரட், வெங்காயம், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற உயர்தர கார்போஹைட்ரேட் உணவுகள் வயிற்றுக்கு ஏற்றவை. புளிப்புச் சுவையுள்ள சிட்ரஸ் பழங்கள், செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் வைக்கும். பழங்களில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு ஏற்றது.

எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை செரிமான மண்டலத்துக்கு ஏற்ற உணவுகள். அதே போல் தினசரி இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். தானிய உணவுகள், கோதுமை ரொட்டி போன்றவை எளிதில் ஜீரணமாகும்.

தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவும். அதே போல, தினசரி உண்ணும் உணவுகள் எளிதில் செரிப்பதற்கு நிறைய தண்ணீர் பருக வேண்டும். பால், பழரசங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மூலம் செரிமான மண்டல கோளாறுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

சத்தான உணவு சாப்பிடுவதன் மூலம் உடம்பில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தடுக்கப்படும். தொப்பை ஏற்படாது. வயிறு தட்டையாக இருக்கும். வாயில் வைக்கும் உணவில் நாம் கவனமாக இருந்தால், வயிற்றில் பிரச்சினை ஏற்படாது
Read More

Wednesday, February 14, 2018

// // Leave a Comment

அவசியமான சில ஆரோக்கிய குறிப்புகள்


அன்றாட வாழ்வில் நாம் சிலபல விஷயங்களை தெரிந்தோ தெரியாமலோ செய்து வருகிறோம். அப்படி நாம் மேற்கொள்ளும் விஷயங்களில் சில நன்மையாகவும், சில தீங்கு விளைவிப்பவையாகவும் இருக்கலாம்.

ஆனால் பலருக்கும் தீங்கு விளைவிக்கும் செயல்கள் என்னவென்று தெரிவதில்லை. அப்படி தெரியாமலேயே அன்றாடம் அவற்றை பின்பற்றி வந்து, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.


ஆரோக்கிய குறிப்பு

  1. மாத்திரைகளை சாப்பிடும் போது குளிர்ச்சியான நீரில் எடுப்பதை தவிர்த்து, வெதுவெதுப்பான நீரில் எடுக்க வேண்டும்
  2. எப்போதும் 5 மணிக்கு மேல் வயிறு நிறைய உணவை உட்கொள்ளும் பழக்கத்தை கைவிட வேண்டும்.
  3. பகல் நேரத்தில் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரித்து, இரவில் நேரத்தில் குறைத்துக் கொள்ள வேண்டும்.
  4. தினமும் இரவில் 10 மணிக்கு தூங்கி, அதிகாலையில் 4 மணிக்கு எழும் பழக்கத்தைக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
  5. எப்போதும் உணவை உண்ட பின் தூங்கும் பழக்கத்தை கொண்டவராயின், அவற்றை உடனே தவிர்ப்பது நல்லது.
  6. போன் பேசும் போது இடது பக்கம் வைத்து பேசுவது நல்லது.
  7. மொபைலை சார்ஜ் போட்டுக் கொண்டே பேசுவதை தவிர்க்க வேண்டும். அதிலும் பேட்டரி மிகவும் குறைவாக இருக்கும் நேரத்தில் சார்ஜ் போட்டிருந்தால், அப்போது எந்த ஒரு அழைப்பு வந்தாலும் பேச வேண்டாம். ஏனெனில் சாதாரண நேரத்தை விட, சார்ஜ் போட்டிருக்கும் நேரத்தில் கதிர்வீச்சு 1000 மடங்கு அதிகமாக இருக்கும்.

Read More

Wednesday, January 24, 2018

// // Leave a Comment

உடல் ஆரோக்கியமாக இருக்க உணவு பழக்க வழக்கங்கள்


கீழ்க்காணும் உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது... உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

பூண்டு சாப்பிட்டீர்களென்றால்... உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்... நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்... கண் நோய்கள் நெருங்காது.

சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு... இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.
Read More