Tuesday, December 29, 2015

// // Leave a Comment

இயற்கை வைத்தியம்


1) என்றும் 16 வயது வாழ ஓர் "நெல்லிக்கனி".

2) இதயத்தை வலுப்படுத்த "செம்பருத்திப் பூ".

3) மூட்டு வலியை போக்கும் "முடக்கத்தான் கீரை".

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் "கற்பூரவல்லி" (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும் "அரைக்கீரை".

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் "மணத்தக்காளிகீரை".

7) உடலை பொன்னிறமாக மாற்றும் "பொன்னாங்கண்ணி கீரை".

8) மாரடைப்பு நீங்கும் "மாதுளம் பழம்".

9) ரத்தத்தை சுத்தமாகும் "அருகம்புல்".

10) கான்சர் நோயை குணமாக்கும் "சீதா பழம்".

11) மூளை வலிமைக்கு ஓர் "பப்பாளி பழம்".

12) நீரிழிவு நோயை குணமாக்கும் "முள்ளங்கி".

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட "வெந்தயக் கீரை".

14) நீரிழிவு நோயை குணமாக்க "வில்வம்".

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் "துளசி".

16) மார்பு சளி நீங்கும் "சுண்டைக்காய்".

17) சளி, ஆஸ்துமாவுக்கு "ஆடாதொடை".

18) ஞாபகசக்தியை கொடுக்கும் "வல்லாரை கீரை".

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் "பசலைக்கீரை".

20) ரத்த சோகையை நீக்கும் " பீட்ரூட்".

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் "அன்னாசி பழம்".

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை "முள் முருங்கை".

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் - கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் "தூதுவளை".

25) முகம் அழகுபெற "திராட்சை பழம்".

26) அஜீரணத்தை போக்கும் "புதினா".

27) மஞ்சள் காமாலை விரட்டும் "கீழாநெல்லி".

28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் "வாழைத்தண்டு".


பகிர்ந்துகொள்ளுங்கள் கண்டிப்பாக மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்.
Read More

Wednesday, December 9, 2015

// // Leave a Comment

தலைமுடி பராமரிக்கும் முறை


1. வேப்பிலையை அரைத்து தலையில் தடவி, 15-20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசலாம்.

2. இரண்டு முட்டைகளை உடைத்து அதில் இருக்கும் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலையில் நன்றாக தேய்த்தபின். 15-20 நிமிடங்கள் கழித்து அலசலாம்.

3. வெந்தயத்தை கூழாக்கி அதில் பன்னீரைச் சேர்த்து தலையில் தேய்த்து 20-30 நிமிடங்கள் கழித்து அலசலாம்.

4. செம்பருத்தி (செவ்வரத்தை) இலையை அரைத்து அதனை தலையில் தேய்த்து ஊறவிட்டு பின்னர் நன்கு அலசி விடலாம்.

5. இரவில் லேசான சூட்டில் தேங்காய் எண்ணெய் தேய்த்து ஊறவிட்டு பின்னர் காலையில் தலைக்கு குளிக்கலாம்.

6. ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும். அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம் .

7. வினிகரை தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும் .

8. சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும் .

9. வெந்தயம் ,வேப்பிலை, கறிவேபிள்ளை, பாசிபருப்பு, ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில் தேய்த்து அலசி வந்தால் கூந்தல் பளபளக்கும்.

9. ஹேர் ரையர் (hair dryer) அடிக்கடி உபயோகித்தால் தலை வறண்டு, முடியின் வேர்கள் பழுதடைந்து விடும். அதிகம் கேமிகல் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர் உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளுவது நல்லது .

10. ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

11. முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து ,ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் கூந்தல் பளபளக்கும்.

12. முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன் ,வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும் .

13. இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது. .அது முற்றிலும் தவறு .தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் . அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.

14. எண்ணெய் குளியல் மிகவும் அவசியம் .சிறிது நல்ல எண்ணையில் இரண்டு மிளகு ,பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும் . முடி உதிர்வதையும் தடுக்கலாம்.

15. கறிவேபிலை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம்.
Read More