Wednesday, May 27, 2015

// // Leave a Comment

உணவே மருந்து.... மருந்தே உணவு...









Read More

Monday, May 25, 2015

// // Leave a Comment

மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?

இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி

பணிச்சுமை, குடும்பப் பிரச்சினை, கடன் தொல்லை போன்றவை மனதின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்ளும் வேளைகளில் ஏராளமானவர்கள் இரவு வேளைகளில் தூக்கம் வராமல் துன்பப்படுவதுண்டு.

விடியும்வரை புரண்டுப் புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் அவதிப்படும் சிலர் மறுநாள் காலை தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக ஞாபகமறதி உள்ளிட்ட பல்வேறு எதிர்வினைக்கு இவர்கள் ஆளாகிப்போகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இதைப்போன்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அறுபதே வினாடிகளில் எளிதாக உறங்கும் முறையை அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உடற்கூறியல் நிபுனரான டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

இந்த எளிதில் உறங்கும் கலைக்கு ’4-7-8 டெக்னிக்’ என அவர் பெயர் சூட்டியுள்ளார். இந்தக் கலையை பயன்படுத்தி உறங்கச் செல்பவர்கள் நிம்மதியான உறக்கத்துக்கு பின்னர், மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் விழிக்கவும் முடியும் என ஆண்ட்ரூ வெய்ல் கூறுகிறார்.

இந்த முயற்சியின் முதல்படியாக, கண்களை மூடியபடி நான்கு வினாடிகளுக்கு மூச்சினை நன்றாக உள்ளே இழுக்க வேண்டும். அந்த மூச்சுக் காற்றை ஏழு வினாடிகளுக்கு நாசிக்குள் நிறுத்திவைத்து அமைதியாக இருக்க வேண்டும். பின்னர், 8 வினாடிகளுக்கு மூச்சுக்காற்றை ஒரே சீராக வெளியேற்ற வேண்டும்.

இப்படி, தொடர்ந்து மூன்று முறை (57 வினாடிகளுக்கு) செய்ய வேண்டும். அடுத்த 3 நிமிடங்களுக்குள் உங்களுக்கு நிச்சயமான, நிம்மதியான உறக்கம் வந்துவிடும் என இவர் கூறுகிறார்.


இது எப்படி சாத்தியம் ஆகிறது?


இந்த முறையில் உங்கள் நுரையீரலுக்குள் மூச்சுக்காற்றை நிறுத்தி வைக்கும் அந்த 7 வினாடிகள் முக்கிய பங்காற்றுகின்றது. இதன் மூலம் நுரையீரல் முழுவதும் ஆக்சிஜன் பரவுகின்றது. இது உடலை தளர்வடையச் செய்து, ஆசுவாசப்படுத்துகின்றது.

அதேவேளையில், இத்தனை வினாடிகளுக்கு இதை செய்ய வேண்டும் என உங்கள் மனதையும் நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதால், நினைவை பாதிக்கும் தேவையற்ற அழுத்தமும், எரிச்சலும் தானாகவே மனதைவிட்டு வெளியேறி விடுகின்றது. இந்த முறைகளின் மூலம் மனதை விட்டு விலகாமல் அட்டை போல ஒட்டிக் கொண்டிருக்கும் தேவையற்ற மனக்கவலைகளையும் வெளியேற்றி விட்டால், அடுத்த வினாடியே நிம்மதியான உறக்கம் உங்களை தழுவிக் கொள்ளும் என டாக்டர் ஆண்ட்ரூ வெய்ல் உறுதியுடன் கூறுகிறார்.
Read More

Thursday, May 21, 2015

// // Leave a Comment

சாதம் வடிச்ச கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

இன்றைய காலத்தில் பிரஸர் குக்கர், எலக்ட்ரிக் குக்கர் வந்துவிட்டதால், பலரும் அக்காலத்தில் சாதம் வடித்து சாப்பிடும் முறையை மறந்துவிட்டனர். ஆனால் சாதத்தை குக்கரில் சமைத்து சாப்பிடுவதை விட, வடித்த சாதம் சாப்பிடுவது தான் நல்லது.

அதுமட்டுமின்றி அப்படி வடித்த சாதத்தின் போது வடிகட்டிய நீரில் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. சொல்லப்போனால் சாதத்தை விட, அந்த நீரில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது எனலாம்.

அக்காலத்தில் நம் முன்னோர் அரிசி சாதத்தை சாப்பிட்டும் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு, அவர்கள் கடுமையாக உழைத்தது மட்டுமின்றி, இந்த சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை குடித்து வந்ததும் என்று கூட சொல்லாம்.


சாதம் வடிச்ச கஞ்சி தண்ணிய குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

எனர்ஜி

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால், உடலின் ஆற்றல் தக்க வைக்கப்படும். அதனால் தான் விவசாயிகள் காலையில் விவசாயம் செய்ய தோட்டத்திற்கு செல்லும் முன் வடித்த கஞ்சி நீரை குடித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் நன்கு எனர்ஜியுடன் நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்ய முடிகிறது


இரைப்பைக் குடல் அழற்சி

சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கும். ஆகவே அவ்வப்போது சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்து வாருங்கள்.


உடல் வெப்பத்தைத் தணிக்கும்

சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க உதவும். அதனால் தான் கோடையில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடிக்க சொல்வார்கள் நம் முன்னோர்கள்.


புற்றுநோயைத் தடுக்கும்

வடிச்ச கஞ்சி தண்ணீரை ஒருசில புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டவை. ஆகவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை குடித்து வந்தால், புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.


மலச்சிக்கல்

சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். எப்போது நீங்கள் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுகிறீர்களோ, அப்போது ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.


கார்போஹைட்ரேட்

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் கார்போஹைட்ரேட் வளமையாக நிறைந்துள்ளது. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.


சூரியனிடமிருந்து நல்ல பாதுகாப்பு தரும்

சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் உள்ள ஓரிசனோல் என்னும் பொருள், சூரியனின் புறஊதாக் கதிர்களில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். அதுவும் சருமத்தின் உட்பகுதியிலும் சரி, வெளிப்பகுதியிலும் சரி.
Read More

Tuesday, May 12, 2015

// // Leave a Comment

செவ்வாழை பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்

திருமணமான தம்பதியர் குழந்தை பேறு பெற செவ்வாழை அருமருந்தாகும்.

குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு அரை ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது.

இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

பல் வலி, பல்லசைவு, போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும்.

பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
Read More

Monday, May 11, 2015

// // Leave a Comment

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

அனைவருக்குமே எலுமிச்சை ஜூஸை வெதுவெதுப்பான நீரில் போட்டு குடிப்பது நல்லது என்று தெரியும். அதிலும் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் இப்படி குடித்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம்

ஆனால் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடிப்பதால் வேறுசில நன்மைகளையும் பெறலாம்.

இப்படி எலுமிச்சை ஜூஸை குடிப்பதால் கிடைக்கும் நன்மைக்கு காரணம் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தான். அதிலும் அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் ஆசிட் தான் முக்கிய காரணம். சரி, இப்போது வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடிப்பதால், அதிலும் அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.


செரிமான மண்டலத்திற்கு உதவும்

அதிகாலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், செரிமான பாதை சுத்தமாகி, செரிமானம் சீரா நடைபெற்று, நெஞ்செரிச்சல் ஏற்படுவது குறைந்து, நச்சுக்கள் எவ்வித தடையுமின்றி வெளியேறும்.


கல்லீரல் சுத்தமாகும்

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட், கல்லீரலில் உள்ள நொதிகள் சீராக இயங்குவதற்கு உதவும். அதுமட்டுமின்றி, அது கல்லீரலில் நச்சுக்கள் தங்குவதையும் தடுக்கும்.


நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும்


எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். மேலும் அதில் உள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படுவதற்கும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும்.


சருமத்தை சுத்தமாக்கும்

எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தை இளமையுடன் காட்சியளிக்கும். அதிலும் எலுமிச்சை ஜூஸை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதால், அது இரத்த நாளங்களில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், அழகாகவும் வெளிக்காட்டும்.


வாய் துர்நாற்றம்

எலுமிச்சை ஜூஸ் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழித்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும்.


எடையைக் குறைக்கும்

வெதுவெதுப்பான நீரில் செய்யப்பட்ட எலுமிச்சை ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், அது உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைத்து, அதிக அளவில் உணவை உட்கொள்ள முடியாதவாறு செய்து, உடல் எடையை விரைவில் குறைக்கும்.


அளவுக்கு அதிகமான எலுமிச்சை வேண்டாம்

எலுமிச்சையை அளவுக்கு அதிகமாகவும் பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் ஒரு எலுமிச்சையின் மூலம் 2 கிலோ எடையைக் குறைக்கலாம். ஆனால் எடையை விரைவில் குறைக்க வேண்டுமென்று ஒரு டம்ளரில் 4 எலுமிச்சையை பிழிந்து ஜூஸ் போட்டு குடித்தால், எவ்வித மாற்றமும் தெரியாது. மாறாக பற்களின் எனாமல் தன் பாதிக்கப்படும்.


குறிப்பு :

எப்போது எலுமிச்சை ஜூஸ் குடித்த பின்னரும் வாயை குளிர்ந்த நீரால் கொப்பளிக்க வேண்டும்.
Read More